உலக அளவில் 1.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு..!

உலக அளவில் புதிதாக 2லட்சத்து 39ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒன்றரை கோடியை கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் அதிகபட்சமாக 67ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதியானதால், அங்கு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது.
பிரேசிலில் 44ஆயிரம் பேர் ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு நாடுகளில் ஒரே நாளில் 5ஆயிரத்து600 பேர் வரை கொரோனாவுக்கு உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 6லட்சத்து 19ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 1300 பேரும், அமெரிக்காவில் 1100 பேரும் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 44ஆயிரமாகவும், பிரேசிலில் 81ஆயிரமாகவும் உள்ளது. அதேசமயம் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 91 லட்சத்தை கடந்துள்ளது.
Tracking the spread of COVID-19 https://t.co/S4sLTOWmRb pic.twitter.com/C0FOnrOHAS
— Reuters (@Reuters) July 22, 2020
Comments