பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்க அரசிடம் உள்ள திட்டம் என்ன ? - நீதிபதிகள்

0 1736
ஊட்டச்சத்தாக முட்டை வழங்கப்பட்டால் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயனைடைவார்கள் என்றும் முட்டை உற்பத்தியாளர்க்கும் உதவியாக இருக்கும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்தாக முட்டை வழங்கப்பட்டால் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயனைடைவார்கள் என்றும் முட்டை உற்பத்தியாளர்க்கும் உதவியாக இருக்கும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட வேண்டும் என்பதால் குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட உணவுகளை வழங்குவதற்கு அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், அம்மா உணவகங்களில் இலவசமாக முட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முட்டை வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும், ஒரே மாதிரியான ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்க முடியாது என்றும் அம்மா உணவகங்களில் முட்டை வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஊட்டச்சத்தாக முட்டை வழங்கப்பட்டால் 48 லட்சத்து 56 மாணவ மாணவிகள் பயனைடைவார்கள் என்றும் முட்டை வழங்குவது தொடர்பாக அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறித்து உரிய பதிலை வருகிற திங்கட்கிழமை அளிக்குமாறும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments