ஸ்டான்லி அரசு மருத்துவமனை இளம் பயிற்சி மருத்துவர் தற்கொலை

0 15610
ஸ்டான்லி அரசு மருத்துவமனை இளம் பயிற்சி மருத்துவர் தற்கொலை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணியில் இருந்த இளம் பயிற்சி மருத்துவர் ஒருவர் விடுதி கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

25 வயதான பயிற்சி மருத்துவர் கண்ணன்,  எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை பிரிவு முதுகலை முதலாமாண்டு பயின்று வந்தார். காலை விடுதி வளாகத்தில சத்தம் கேட்டு பயிற்சி மருத்துவர்கள், ஊழியர்கள் ஓடிச் சென்று பார்த்த போது, மருத்துவர் கண்ணன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

உடுமலைபேட்டையைச் சேர்ந்த கண்ணன் கொரோனா வார்டில் தொடர்ந்து பணியில் இருந்ததால் மன உளைச்சலில் அவர் இருந்து வந்ததாக உடன் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களின் வேலை பளுவை குறைக்க வேண்டும் எனவும் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

அதிலும் முதலாம் ஆண்டு முதுகலை மருத்துவர்களுக்கு 24 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து கவச உடையுடன் பணிபுரியும் நிர்பந்தம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments