தமிழகத்தில் மேலும் 4807 பேருக்கு கொரோனா..88 பேர் பலி

0 6360
தமிழ்நாட்டில் இன்று 4807 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4 ஆயிரத்து 807 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. மேலும், இதுவரை இல்லாத வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 88 பேர், உயிரிழந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை, அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில், 4 ஆயிரத்து 807 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியது.

கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தை தாண்டி இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில், கொரோனாவுக்கு 88 பேர் பலியாயினர். சென்னையில் 31 வயது இளைஞர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். தமிழகத்தில் கொரோனா உயிர்ப்பலி 2 ஆயிரத்து 403 ஆக உயர்ந்தது.

கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக ஒரே நாளில் 48 ஆயிரத்து 195ஆக மேற்கொள்ளப்பட்டது. இதுவரையில், 18 லட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்ததால், கொரோனா சிகிச்சை முடிந்து, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments