கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட காய்கறி சூப்பில் பூச்சி.. சிகிச்சை மையத்தில் நோயாளிகள் போர்க்கொடி..!

0 4105

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட காய்கறி சூப்பில் பூச்சி கிடந்ததால், அங்கிருந்தவர்கள் தரமான உணவு வழங்கக் கோரி வெளியில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...

கள்ளக்குறிச்சியில் உள்ள மவுண்ட் பார்க் என்ற தனியார் பள்ளியில் 400 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுவோருக்கு தரமான சாப்பாடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துவந்தது. இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை அங்குள்ள ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்ட காய்கறி சூப்பு பாக்கெட்டில் பூச்சி ஒன்று செத்து மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் அங்கிருந்தவர்களிடம் தெரிவிக்க ஏற்கனவே விரக்தியுடன் இருந்தவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சாப்பாடு எடுத்துவந்த ஊழியர்களிடம் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கிருந்த அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு மாற்றி விடப் போவதாக ஊழியர் ஒருவர் எச்சரித்ததால், கையில் தட்டுடன் தரமான சப்பாடு கேட்டு மைதானத்திற்கு வந்து கோஷமிட்டவர்களை பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீஸ் ஒருவர் சமாதானப்படுத்தினார்.

தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையுடன் தரமான சாப்பாடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சாப்பாடு பார்சல் கொடுக்கும் ஒரு சிலர் செய்கின்ற தவறுகளால் நோயாளிகள் வருத்தப்படும் சூழல் ஏற்பட்டதாகவும் அவர்களுக்கு தரமான உணவு குடிநீரும் தடையின்றி குறிப்பிட்ட நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த பகுதி பொறுப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments