"50 சதவீத பணியாளர்கள் தினசரி பணிக்கு வருகை தர வேண்டும்"-பள்ளிக்கல்வித்துறை

அனைத்து கல்வி அலுவலகங்களிலும் ஐம்பது சதவீத ஊழியர்கள் தினசரி பணிக்கு வர வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணிக்கும் வரும் நிலையில், தேங்கி கிடக்கும் கோப்புகளின் பணிகளை முடிக்கும் பொருட்டு 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சுழற்சி முறையில் பணியாற்றுவது தொடர்ந்தாலும், 50 சதவீத ஊழியர்கள் தினசரி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறியுறுத்தப்பட்டு உள்ளது.
"50 சதவீத பணியாளர்கள் தினசரி பணிக்கு வருகை தர வேண்டும்"-பள்ளிக்கல்வித்துறை #SchoolEducation | #Covid19 https://t.co/tofcv6AoKH
— Polimer News (@polimernews) July 14, 2020
Comments