தனிநபர் இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம்

சென்னையில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வணிக நிறுவனங்கள், அழகு நிலையங்கள், ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள், உணவகங்களுக்கு மாநராட்சி சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை முறைப்படுத்தி ஒரே மாதிரியான அபராதத் தொகை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
விதிகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கும் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனிநபர் இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் |#ChennaiCorporation https://t.co/th0KDtgA6R
— Polimer News (@polimernews) July 12, 2020
Comments