பாகிஸ்தானின் எல்லையருகே பதுங்கியிருக்கும் 300 தீவிரவாதிகள்

0 15605

இந்திய எல்லையில் ஊடுருவுவதற்காக பாகிஸ்தானில் சுமார் 300 தீவிரவாதிகள் காத்திருப்பதாக ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தக்க சமயம் பார்த்து ஊடுருவதற்காக ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்ட 250 அல்லது 300 தீவிரவாதிகள் காத்திருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .அடுத்த சில நாட்களில் தீவிரவாதிகள் எல்லைத் தாண்டி வரலாம் என்று எல்லை பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் , நேற்று இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் தீவிரவாதிகளிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய இந்திய பாகிஸ்தான் பணம் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments