கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

0 3458

கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி வந்தன.

ஆனால் அதை மியாட் மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை மறுத்து இருந்தது. அமைச்சர் அன்பழகனின் உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் செல்போன் மூலமாக துறை ரீதியிலான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அமைச்சர் கே.பி. அன்பழகன் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், தாம் நலமுடன் இருப்பதாகவும், கொரோனாவில் இருந்து குணமாகி ஓய்வில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள அவர், 15-ம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட உள்ளதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments