உலகம் முழுவதும் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 5,500 பேர் பலி

0 1586

உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 26 லட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 62 ஆயிரமாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முன்னணியில் பிரேசில் 2ம் இடத்திலும், இந்தியா 3ம் இடத்திலும் உள்ளன.

கொரோனாவால் ஆயிரத்து 720 பேர் மரணித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் பிரேசில் முதலிடம் பிடித்துள்ளது. 850 பேருடன் அமெரிக்கா 2ம் இடத்திலும், 730 பேர் உயிரிழப்புன் மெக்ஸிகோ அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேலும் இந்தியா, ரஷ்யா, பெரு, ஈரான், தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் 3 இலக்கங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments