முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையைப் பாராட்டி அமெரிக்காவை சேர்ந்த அமைப்பு கெளரவப்படுத்தியது

0 5878
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அவரை அமெரிக்க ரோட்டரி அமைப்பு ஒன்று PAUL HARRIS FELLOW என அழைத்து கௌரவப்படுத்தி உள்ளது.

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அவரை அமெரிக்க ரோட்டரி அமைப்பு ஒன்று  PAUL HARRIS FELLOW என அழைத்து கௌரவப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரத்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் the rotary foundation of rotary international அமைப்பு குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய்-சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு PAUL HARRIS FELLOW என அழைத்து கௌரவப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி இவ்வமைப்பு  PAUL HARRIS FELLOW என கௌரவப்படுத்தியுள்ளது  என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments