உத்தரபிரதேசத்தில் 4 நாள் முழு ஊரடங்கு..!

0 2808

உத்தரபிரதேசத்தில் இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில், அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டாலும், ரயில்கள் இயங்க தடை இல்லை எனவும், ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கிராமப்புறங்களில் உள்ள தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை உத்திரபிரதேச மாநிலத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments