ஒடிசாவில் திருமணம், இறுதிசடங்குக்கு உள்ளூர் காவல்நிலைய அனுமதி கட்டாயம்

0 1194

ஒடிசா மாநிலத்தில் திருமணம், இறுதிசடங்கு ஆகியவற்றுக்கு காவல்துறையின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருமண நிகழ்ச்சியை ஆடம்பரமாக நடத்தக்கூடாது, குறைவான எண்ணிக்கையிலேயே விருந்தினர் பங்கேற்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல் இறுதிசடங்கிலும் கூட்டம் கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஒடிசா அரசு வெளியிட்ட கொரோனா கட்டுப்பாடு புதிய வழிகாட்டுதல்களில், திருமணத்துக்கும், இறுதிசடங்குக்கும் உள்ளூர் காவல்நிலையத்தில் கட்டாயம் அனுமதி பெற வேண்டும், திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், இறுதிசடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்படுவதை மாவட்ட நிர்வாகங்களும், காவல்துறையும்  உறுதி செய்ய வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments