கொரோனா பாதிப்பு புதிய உச்சம் மேலும் 24,879 பேருக்கு தொற்று..!

0 2073

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 24,879 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 ஆயிரத்து 879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 487 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 296ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நாட்டில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையும் 21 ஆயிரத்து 129ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 69 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர்த்து மருத்துவ சிகிச்சையில் இதுவரை 4 லட்சத்து 76 ஆயிரத்து 378 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 724ஆகவும், பலி எண்ணிக்கை 9,448ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் 2ம் இடத்திலுள்ள தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 350ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 1,700ஆகவும் அதிகரித்துள்ளது. 3ம் இடத்திலுள்ள டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 864ஆகவும், பலி எண்ணிக்கை 3,213ஆகவும் உயர்ந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments