மின் கட்டண வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

0 3057
புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு

ஊரடங்கு சமயத்தில் முந்தைய மின் கட்டணத்தின் அடிப்படையில் புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மார்ச் முதல் மின் கணக்கீடு செய்யாததால், மின்சார யூனிட்டின் அளவு யாருக்கும் தெரியாது என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது போன்ற சூழலில், மின்சார சட்ட விதிகளின் படி முந்தைய மாத கட்டணத்தையே முதல் மாதம் நிர்ணயித்ததாகவும் கூறப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், ஊரடங்கு காலத்தின் போது, பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்ததால் மின் கட்டணம் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது எனக் கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments