பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

0 1175
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது

டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் சாலையில் உள்ள வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்  உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கொரோனா நிலவரம், அரசு எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கில் இருந்து விலகும் இரண்டாம் கட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே போன்று லடாக் எல்லையில் 4 இடங்களில் இருந்து சீன படைகள் பின்வாங்கியுள்ள நிலையில், அங்கு பதற்றத்தை தணிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பொருளாதார நிதி உதவித் திட்டத்தில் மேலும் சில துறைகளுக்கு தனியாக ஒதுக்கீடு செய்வது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments