ஒரே நாளில் உலக நாடுகளில் 5,512 பேர் உயிரிழப்பு

0 979

உலக அளவில் ஒரே நாளில் புதிதாக 2 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சத்தை நெருங்குகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5500 பேர் வரை கொரோனாவுக்கு பலியானதால் அந்த எண்ணிக்கையும் 5 லட்சத்து 46ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 55 ஆயிரம் பேருக்கும், பிரேசிலில் 48ஆயிரம் பேருக்கும் ஒரே நாளில் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பிரேசிலில் 1300 பேரும், அமெரிக்காவில் 993 பேரும், மெக்சிகோவில் 480 பேரும் பலியாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் ஒரே நாளில் 10ஆயிரம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொற்று பாதித்தவர்களில் 58ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து 68லட்சத்து49ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments