திருவள்ளூரில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 100ஆக உயர்வு

0 928

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் மேலும் 218 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆவடியில் 35 பேரும், பூந்தமல்லியில் 22 பேரும் ஒரே நாளில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5ஆயிரத்தை கடந்துள்ளது.   

தொற்று பாதித்தவர்களில் 3ஆயிரத்து 217 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஆயிரத்து 884பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை திருவள்ளூர் மாவட்டத்தில் 94 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்த நிலையில், இன்று மேலும் 6 பேர் பலியாகியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments