சேலத்தில் இறுதிச் சடங்கில் பங்கேற்றோரில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 6297

சேலம் மாவட்டத்தில் புதிதாகக் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 247 ஆக உள்ளது. கடந்த வெள்ளியன்று 77 பேருக்கும், சனியன்று 70 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஞாயிறன்று புதிதாக 41 பேரும் திங்களன்று 40 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் மேட்டூர் அருகே பண்ணவாடியில் இறந்த ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றோரில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர், அவர் குடும்பத்தினர் உட்பட 58 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் சேலம், மேட்டூர், மேச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பண்ணவாடியில் சுகாதாரத்துறையினர் வீடுவீடாகச் சென்று பரிசோதனை செய்தும், கிருமிநாசினி தெளித்தும் வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments