சென்னையில் மொத்தமாக 64,689 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1010

சென்னையில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்றி வெளியான தரவுகளின் படி சென்னை முழுவதும் மொத்தமாக 64 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களும் 40 ஆயிரத்து 111 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23 ஆயிரத்து 581 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்றுவரை 996 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஆண்கள்  58.84 சதவீதம் பேரும், பெண்கள் 41.16 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் 2,297 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,586 தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments