சிரியா ஐஎஸ் இயக்கத்துக்குப் போதைப்பொருளால் பெருமளவில் நிதி

0 1154

சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தினர் போதைப்பொருள் தயாரித்து ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் நிதியைத் தீவிரவாதச் செயலுக்குப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

சிரியாவில் இருந்து இத்தாலியின் சாலர்னோ துறைமுகத்துக்கு வந்த சரக்குப் பெட்டகங்களைச் சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். 3 சரக்குப் பெட்டகங்களில் கேப்டஜன் ஆம்பீட்டமைன்ஸ் என்கிற போதைப் பொருள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

மொத்தம் 14 டன் எடையுள்ள போதைப்பொருளின் சந்தை மதிப்பு ஏழாயிரத்து 542 கோடி ரூபாய் ஆகும். போதைப் பொருளின் அளவிலும் பணமதிப்பிலும் உலகில் இதுவரை கைப்பற்றப்பட்டதிலேயே இது பெருமளவு என இத்தாலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வகைப் போதைப் பொருட்கள் சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தினரால் பெருமளவில் தயாரிக்கப்படுவதாகவும், இவற்றை ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் நிதியைத் தீவிரவாதச் செயல்பாட்டுக்குப் பயன்படுத்துவதாகவும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments