தமிழ்நாட்டில் இன்று 3943 பேருக்கு கொரோனா உறுதி..!

0 9130
தமிழ்நாட்டில் 6ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது

தமிழகத்தில் ஒரே நாளில் 3943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மேலும் 60 பேர் பலியானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1200ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3943 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகதாரத்துறை அறிவித்துள்ளது. அதில், 87 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள். ஜெர்மனியில் இருந்து வந்த 6 பேருக்கும், பக்ரைனில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சட்டிஷ்கரில் இருந்து வந்த 30 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த 20 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகி  இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டி விட்டது.

கொரோனா தொற்றை கண்டறிவதற்காக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 ஆயிரத்து 242 மாதிரிகள் 90 ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  2325 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 38,889 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் தீவிரத்தால் சென்னையை சேர்ந்த 35 வயது பெண் உள்பட மேலும் 60 பேர் பலியானதால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1201 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. 

சென்னையில் புதிதாக 2393 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் இதுவரை 34,828 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 22,610 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 1201 பேரில், 888 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 160 பேருக்கும், மதுரையில் 257 பேருக்கும், திருவள்ளூரில் 153 பேருக்கும், காஞ்சிபுரத்தில் மேலும் 90 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 92 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments