வங்கிகள் இன்றும், நாளையும் செயல்படும்

0 10832
33% பணியாளர்களுடன் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க அனுமதி

முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வங்கிகள் இன்றும் நாளையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கு காலகட்டத்தில் வங்கிகள் வாடிக்கையாளர்கள் சேவையின்றி முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அலுவல் பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  மாதாந்திர கடைசி நாட்கள் என்பதால் இன்றும் நாளையும் 33 சதவீத பணியாளர்களுடன் அனைத்து வங்கிகளும் மாலை 4 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments