சீனா, பாக்.விரும்பும் கருத்துக்களை வெளியிடுகிறார் ராகுல் - உள்துறை அமைச்சர் அமித் ஷா

0 2685
ராகுல் காந்தி மேலோட்டமான அரசியல் செய்கிறார்-அமித் ஷா

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எந்த புரிதலும் இன்றி மேலோட்டமாக அரசியல் செய்கிறார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறிய அவர், எல்லைப் பதற்றம் தொடர்பாக விவகாரங்களில், சீனா மற்றும் பாகிஸ்தான் விரும்பும் வகையிலான கருத்துக்களை ராகுல் வெளியிடுவதாக குற்றஞ்சாட்டினார்.

சரண்டர் மோடி என்று அவர் பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி இட்ட பதிவை, சீனாவும், பாகிஸ்தானும் பிரபலப்படுத்திவருவதாக சாடினார். லடாக் எல்லை விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பும் ராகுலுக்கு நாடாளுமன்றத்தில் தக்க பதில் அளிக்கத் தயார் என்ற அவர், கடந்த 1962 ல் நடந்த இந்திய-சீன போர் முதல் இப்போதைய நிலவரம் வரை விவாதிக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments