மதுரை மாவட்டத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை-அமைச்சர் விஜயபாஸ்கர்

0 4488

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்றும் மன நல மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்து கொரோனோ பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மதுரை உலக தமிழ் சங்கத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனோ வைரஸ் மட்டுமே எதிரி கொரோனோ நோயாளி எதிரியல்ல என்றார். கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை அதே நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments