ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி

0 4515

சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில், 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தந்தையையும் மகனையும் இழந்து வாடும் அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளதோடு, அதிமுக சார்பில் 25 லட்ச ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும் என்றும் ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையை, அமைச்சர் கடம்பூர் ராஜூ  நேரில் சென்று வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments