அபுதாபியில் சிக்கித் தவித்த 360 தமிழக தொழிலாளர்களுக்கு உதவிய நல்லுள்ளங்கள்

0 2273

அபுதாபியில் 4 மாதங்களாக தவித்த தமிழக தொழிலாளர்கள் 360 பேர் மனிதநேயம் உள்ளவர்களின் கூட்டு முயற்சியால் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர்.

அங்குள்ள கச்சா எண்ணை நிறுவனத்தில் பராமரிப்புப் பணிக்காக தமிழகத்திலிருந்து 380 பேர் சென்றுள்ளனர். மார்ச் மாதத்துடன் பணி முடிவடைந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இஸ்கோ என்ற சார்பு நிறுவனத்தின் பொதுமேலாளரான நெல்லையைச் சேர்ந்த சுப்புராயலு என்பவர் அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகி தொழிலாளர்கள் ஊர் திரும்ப அனுமதி பெற்றுத் தந்துள்ளார்.

அதே நேரத்தில் அரேபியன் இண்டர் நேசனல் நிறுவனத்தில் பணிபுரிந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரமணி என்பவர் தங்கள் நிர்வாகத்திடம் பேசி, தொழிலாளர்கள் அனைவருக்கும் விமான டிக்கெட், தங்கும் விடுதிக்கான செலவு மட்டுமின்றி, கைச்செலவுக்கு என்று தனியாகவும் குறிப்பிட்ட தொகையை  பெற்றுக் கொடுத்துள்ளார். இந்த இருவரின் முயற்சியால் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் 360 தொழிலாளர்கள் திருச்சி வந்தடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments