பெட்ரோல்-டீசல் விலை 14-வது நாளாக உயர்வு..!

0 1358

பெட்ரோல்-டீசல் விலை 14வது நாளாக இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 45 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 27 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 52 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 29 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மார்ச் மாதத்திற்குப் பின் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், கடந்த 7ந் தேதி முதல் அவற்றின் விலை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 14 நாட்களில் பெட்ரோல் விலையை 6 ரூபாய் 73 காசுகளும், டீசல் விலையை 7 ரூபாய் 7 காசுகளும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments