குடிமகன்கள் கூட்டம் கொரோனா அபாயம் draft

0 1437

சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், அண்டை மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் கடைகளில் திரண்ட குடிமகன்கள், கொரோனா குறித்து சிறிதும் அச்சமின்றி தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் மதுபானங்களை வாங்கி சென்றனர். 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள டாஸ்மார்க் கடையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்ட குடிமகன்கள், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்டி, பெட்டியாக மதுபானங்களை வாங்கி சென்றனர். கண்காணிப்பு பணியிலிருந்த போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் குடிமகன்கள் மதுபானங்களை வாங்க திரண்டனர். பொன்னேரி பெரியபாளையத்தில் மதுவாங்க குவிந்த குடிமகன்கள், தனிநபர் இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில், குடிமகன்கள் முண்டியடித்துக் கொண்டு போட்டி போட்டு மதுபானங்களை வாங்கி சென்றனர். முழு ஊரடங்கின் போது மதுபானங்கள் கிடைக்காது என்று கருதி பெட்டிகள், பைகள், சாக்கு மூட்டைகளிலும் அதிகளவிலான மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில், சாக்குப்பைகளை கொண்டு வந்து குடிமகன்கள் மது வாங்கி சென்றனர். மேலும் மது வாங்குவதற்காக தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல் நீண்ட தூரத்துக்கு காத்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments