செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி

0 1335

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னைக்கு வந்து சென்ற மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 80 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், ஏற்கனவே தொற்று பாதித்தவர்களுடன் குடும்பத்தினர், உறவினர் என சுமார் 25 பேரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அம் மாவட்டத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 379ஆக அதிகரித்துள்ள நிலையில், ஆயிரத்து 597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று உயிரிழந்த 3 பேரையும் சேர்த்து அங்கு கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 33ஆக உயர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments