10,000 படுக்கைகளுடன் அமைக்கப்படும் சிறப்பு கொரோனா முகாம்

0 1466

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக சுமார் 10 ஆயிரம் படுக்கை வசதிகளை கொண்ட, பிரம்மாண்டமான தற்காலிக சிகிச்சை முகாமை டெல்லி அரசு அமைத்து வருகிறது.

நோய்த்தொற்று அதிகரிப்பால் அங்கு ஏற்கனவே 70 சதவீதம் அளவிலான கொரோனா படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள் மேலும் 15 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெற்கு டெல்லியில் 22 கால்பந்தாட்ட மைதானங்களின் அளவிற்கு பரப்பளவை கொண்ட, ராதா சோமி ஆன்மீக மையம் கொரோனா சிகிச்சை முகாமாக மாற்றப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டு உள்ள இந்த முகாம், தலா 500 படுக்கை வசதிகளுடன் 20 சிறு மருத்துவமனைகளை போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments