பெய்ஜிங்கில் கொரோனா வைரசின் புதிய பரவலால் கூடுதல் கட்டுப்பாடுகள்

0 1044

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா வைரசின் புதிய பரவல் தொடங்கி உள்ளதாக அச்சம் எழுந்துள்ள நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஜின்ஃபாடி விவசாய சந்தையை மையமாக கொண்டு பெய்ஜிங்கில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 106 ஆக உயர்ந்து உள்ளது.

இதனால் 22 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பெய்ஜிங்கில் இருந்து சிச்சுவான் மாகாணத்துக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது போல் மற்ற இடங்களுக்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த வெளியூர் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு உள்ளவர்களின் தொடர்புகள் பெய்ஜிங்கை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments