விமானங்களின் நடு இருக்கைகளில் பயணிகள் அமர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

0 655

விமானங்களின் நடு இருக்கைகளில் பயணிகள் அமர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும்போது ஏர் இந்தியா நிறுவனம் தவறு இழைத்ததற்கோ, விதிகளை  மீறியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள் விமானத்தில் வந்ததால் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று கூறினர் நடு இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதி அளித்த நீதிபதிகள் அதேநேரம் விமான போக்குவரத்து இயக்குநரக வழிகாட்டுதல்களை பின்பற்ற உத்தரவிட்டனர்.

இதனிடையே நடு இருக்கைகளை காலியாக வைக்க முடியாவிட்டால் அவற்றில் அமரும் பயணிகளுக்கு முகக்கவசத்துடன் முழு உடல் கவசம் வழங்கப்பட வேண்டும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments