குகை மண் சரிந்து 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

0 594

மத்தியப் பிரதேசம் ஷாடோல் பகுதியில் மண் சரிந்ததில் 6 தொழிலாளர்கள் புதையுண்டு உயிரிழந்தனர்.

மலைக்குகைகளில் சுரங்கப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது எதிர்பாராத விதமாக மண் சரிந்தது.

இதில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டபோதும் 6 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட உள்ள நிலையில், இறுதிச் சடங்கிற்காக மாவட்ட நிர்வாகம் தலா 10 ஆயிரம் ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments