தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 2 நாள் தூய்மைப் பணி

0 2417

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கிருமிநாசினி தெளித்துத் தூய்மைப்படுத்தப்படுகின்றன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன.

சுழற்சி முறையில் பணியாளர்கள் வருவதால் சனிக்கிழமையும் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, மாதத்தில் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் இன்றும் நாளையும் கிருமிநாசினி தெளித்துத் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள அனைத்து அலுவலகங்களும் கிருமி நாசினி தெளித்துத் தூய்மை செய்யப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments