தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கிய ராகவா லாரன்ஸ்...

0 6146

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர், ராகவா லாரன்ஸ். இவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கும் பல்வேறு விதங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்குத் தலா 50 லட்சம் நிதி உதவி செய்தார். மேலும் நடனக்கலைஞர் சங்கத்துக்கு ரூ.50 லட்சம், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்கு  ரூ.75 லட்சம் என முதலில் ரூ.3 கோடி அளவுக்குள் வழங்கினார். இதுதவிர தூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் பொருட்டு தனது அடுத்த பட சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சம் வழங்குவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த படத்தின் தயாராளரான பைவ் ஸ்டார் கதிரேசன், 'லாரன்ஸின் அறிவுறுத்தலின் பேரில் தூய்மைப் பணியார்கள் 3385 பேரின்  வாங்கிக் கணக்கில் ரூ.25,38,750 ரூபாய் நேரடியாக செலுத்தியிருக்கிறோம்' என்று தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவலை டுவிட்டரில் பகிர்ந்துகொண்ட ராகவா லாரன்ஸ் பைவ் ஸ்டார் கதிரேசனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments