ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு

0 1621

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 447 ரூபாயாக இருந்தது. இன்று அந்த விலை 32 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 479 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சவரன் தங்கம் விலை நேற்று 35 ஆயிரத்து 576 ரூபாயாக இருந்தது. இன்று அந்த விலை 256 ரூபாய் உயர்ந்து, 35 ஆயிரத்து 832 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் வெள்ளியின் விலை இன்று லேசாக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 53 ஆயிரத்து 100 ரூபாயாக இருந்தது. இன்று 200 ரூபாய் குறைந்து 52 ஆயிரத்து 900 ரூபாயாக சரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments