கொரோனா பாதிப்பு 2.67 லட்சத்தை தாண்டியது

0 665

நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 7 ஆயிரத்து 500ஐ நெருங்கியுள்ளது.

திங்கள்கிழமை மட்டும் (கடந்த 24 மணி நேரம்) மேலும் 9 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் திங்கள்கிழமை மட்டும் கொரோனாவுக்கு மேலும் 331 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டில் கொரோனா பரவியதில் இருந்து ஒருநாளில் மிகவும் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு பதிவாகியிருப்பது இதுவே முதல்முறை ஆகும். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 598ஆகவும், கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 466ஆகவும் அதிகரித்தது.

இந்நிலையில் ராஜஸ்தானில் மேலும் 144 பேருக்கு இன்று கொரோனா கண்டறியப்பட்டது. இதேபோல் உத்தர பிரதேசத்தில் மேலும் 389 பேருக்கும், மணிப்பூரில் மேலும் 10 பேருக்கும் கொரோனா உறுதியாகியிருந்தது.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 917 பேர் சிகிச்சை பெற்ற நிலையில், 1 லட்சத்து 29 ஆயிரத்து 215 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 88 ஆயிரத்து 528ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 169ஆகவும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments