சிறப்பு ரயில்களில் வழக்கத்தை காட்டிலும் பயணிகள் வரத்து குறைவு

0 634

கொரோனா முன்னெச்சரிக்கையாக மாநில அரசுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை காரணமாக, ராஜ்தானி மற்றும் அதிவிரைவு போன்ற சிறப்பு ரயில்களில் வழக்கத்தை காட்டிலும் குறைவான பயணிகளே பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பயணிகள் ரயில் சேவை, நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆனாலும், பொதுமக்களிடையே நிலவும் அச்சம் மட்டுமின்றி, ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. முதல் வாரத்தில் ராஜதானி ரயில்களில் 62 சதவீதமும், அதிவிரைவு ரயில்களில் 67 சதவீதமும் மட்டுமே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments