ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 சரிவு

0 66583

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 392 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலையில் சிறிது ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 484 ரூபாயாக இருந்தது. இன்று காலை அந்த விலை கிராமுக்கு 49 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 435 ரூபாயாக உள்ளது.

இதேபோல் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை 35 ஆயிரத்து 872 ரூபாயாக இருந்தது. அந்த விலை இன்று மாலை 392 ரூபாய் குறைந்து, 35 ஆயிரத்து 480 ரூபாயாக உள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 53 ஆயிரத்து 300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 800 ரூபாய் சரிந்து 52 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments