பாக். அதிபர் மாளிகையில் முன்னாள் அமைச்சர் பலாத்காரம் செய்ததாக பெண் புகார்

0 733

பாகிஸ்தான் அதிபர் மாளிகையில் உள்துறை முன்னாள் அமைச்சர் ரஹ்மான் மாலிக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த சாகச பெண் கலைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் அதிபர் மாளிகையில் தங்கியிருந்தபோது,அப்போதைய பிரதமர் யூசுப் ராசா கிலானி, சுகாதார அமைச்சர் மக்தூம் ஷாஹாபுதீன் ஆகியோரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாகவும் சிந்தியா டிரிச்சி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தனது புகார்கள் தீவிரமானது என்றும் அதற்கு தன்னிடம் போதிய ஆதாரம் உள்ளதாகவும் தனது பேஸ்புக் லைவில் தெரிவித்துள்ள சிந்தியா, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த கோரி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments