இந்தியாவுடனான எல்லைப்பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு எட்டப்படும்-சீனா நம்பிக்கை

0 2826

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்படும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எல்லைப்பிரச்சினை தொடர்பாக இரு நாடு களுக்கு இடையே நாளை, பேச்சு வார்த்தை நடைபெறும் சூழலில், பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர்  Geng Shuang, தங்களிடம் முழு அளவிலான எல்லைப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வழிமுறைகள் உள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தியா - சீனா இடையே 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் எல்லையில், கிழக்கு லடாக்கின் Pangong Tso, Galwan Valley மற்றும் Demchok ஆகிய 3 இடங்கள் தொடர் பாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை நீடித்து வருகிறது.

ஏற்கனவே, 10 முறை நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படாத சூழலில், நாளை நடைபெறும் உயர் மட்ட  ராணுவ அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments