சென்னை அடையாறு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது

0 2253

சென்னையில் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை மண்டலங்களில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தையும், அடையாறு மண்டலத்தில் ஆயிரத்தையும் கடந்துள்ளது.

15 மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 598ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயிரத்து 224 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதற்கடுத்து தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2 ஆயிரத்து 93 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 29 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2 ஆயிரத்து 14 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திருவிக நகர் மண்டலத்தில் ஆயிரத்து 798 பேருக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் ஆயிரத்து 525 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8,900 பேர் குணமாகியுள்ள நிலையில்,139 பேர் பலியாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments