உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பு

0 1688

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அறுபத்தி நான்கு லட்சத்தை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றுக்கு 3 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 30 லட்சத்து 68 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 80 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. 2ம் இடத்திலுள்ள பிரேசிலில் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், 3ம் இடத்திலுள்ள ரஷ்யாவில் 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments