தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 56 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்- முதலமைச்சர்

0 3546

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 56 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். தமிழ்நாட்டில் 56 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறினார். இறப்பு விகிதம் 0.80 சதவிகிதம் என்ற குறைந்த அளவில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பிசிஆர் கிட்கள் தொடர்பான எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டை மறுத்த முதலமைச்சர், 5 லட்சத்து 3 ஆயிரத்து 339 பி.சி.ஆர். கிட் பயன்படுத்தப்ப்பட்டு, 2 லட்சத்து 92 ஆயிரம் பி.சி.ஆர்.கிட் பரிசோதனை மையங்களில் மீதம் உள்ளது என்றார்.

இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று கூறிய முதலமைச்சர், வென்டிலேட்டர் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் கொரோனா முற்றவில்லை என்று தெரிவித்தார்.

சென்னையில் ஒன்றரை கோடி முக கவசம் வழங்கப்படுவதாகவும், ரேசன் கடைகளில் இலவசமாக முக கவசம் வழங்க பரிசீலனை செய்யப்படுகிறது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments