மும்பை போலீசாருக்கு ஒரு லட்சம் சானிடைசர்களை நன்கொடையாக வழங்கிய சல்மான்கான்

பிரபல இந்தி திரையுலக சூப்பர்ஸ்டார் சல்மான்கான் மும்பை போலீசாருக்கு ஒரு லட்சம் சானிடைசர்களை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
கொரோனாவை எதிர்த்து போராடும் நடவடிக்கையில் மும்பை போலீசார் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக இதனை சல்மான்கான் வழங்கி உள்ளார். இதற்கிடையில் சல்மான்கானின் இந்த உதவிக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
54வயதாகும் சல்மான்கான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்தி திரையுலகில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முதன்முதலாக நிதி உதவி அளித்தவர் சல்மான்கான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank u ? @CMOMaharashtra @Iamrahulkanal @MumbaiPolice #IndiaFightsCorona https://t.co/GtBL3UrTWC
— Salman Khan (@BeingSalmanKhan) May 30, 2020
Comments