சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை தற்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை - CMDA

0 2032
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை தற்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை - CMDA

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை சென்னை உயர்நீதிமன்றத்தில் சி எம் டி ஏ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரேசன் தாக்கல் செய்த மனுவில், உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க சிறப்பு அதிகாரி,சி.எம்.டி.ஏ, மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது,
கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் உணவு தானிய சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுகுறித்து சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments