உச்சம் தொட்ட சென்னையின் கொரோனாவின் பாதிப்பு

0 1787
உச்சம் தொட்ட சென்னையின் கொரோனாவின் பாதிப்பு

சென்னையில் ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் மேலும் 25 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 23 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 510 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பதால், தலைநகரில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 640ஆக உயர்ந்துள்ளது. 5492 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 6056 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மட்டும் கொரோனாவால் மொத்தம் 91 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்து 2வது இடத்தில் இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 857 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 788 ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் மேலும் 13 பேருக்கும் திருவண்ணாமலையில் மேலும் 14 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடலூரில் மேலும் 8 பேருக்கும், தூத்துக்குடியில் 10 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரையில் மேலும் தலா 2 பேருக்கும், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் தலா ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பியவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்த வந்த மேலும் 35 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று குஜராத், டெல்லி, தெலங்கானா, கேரளா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த 14 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த 5 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

12 வயதுக்கு உட்பட்டவர்களில் இதுவரை 1088 பேரும், 13 முதல் 60 வயதுடையோரில் 15 ஆயிரத்து 105 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1535 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments