2.90 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட சுயவிபரங்கள் திருட்டு

0 3560

இந்தியாவைச் சேர்ந்த 2 கோடியே 90லட்சம் பேர்களின் தனிப்பட்ட சுயவிபரங்கள் திருடப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ஆன்லைன் உளவு நிறுவனமான சைபிள் தயாரித்துள்ள அறிக்கையில், இந்தியாவைச் சேர்ந்த வேலைதேடும் 2 கோடியே 90 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் எனப்படும் இணைய குற்றவாளிகள் பயன்படுத்தும் கருப்பு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வேலை தேடுவோரின் மின்னஞ்சல், கல்வித்தகுதி, தொலைபேசி எண்கள் மட்டுமின்றி வீட்டு முகவரிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் வெளியாகி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் மூலம் மோசடி, திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் சைபிள் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments