கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து சிறப்பு அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை

0 335
கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து சிறப்பு அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்கச் சென்னை மாநகராட்சி மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளோடு தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்புப் பணிகளைக் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனும், அவருக்கு உதவியாகக் காவல்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னரும் கொரோனா பரவுவது குறையவில்லை.

இதையடுத்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஆட்சிப்பணி அதிகாரி, ஒரு காவல்பணி அதிகாரி, சுகாதார அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments